Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோளிங்கர் சோழபுரீஸ்வரர் கோயிலில் ... வள்ளியூர் முருகன் கோவில் தேரோட்டம் கோலாகலம்; பக்தர்கள் பரவசம் வள்ளியூர் முருகன் கோவில் தேரோட்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் வைகாசி திருவிழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் வைகாசி திருவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

15 மே
2024
11:05

ஆழ்வார்திருநகரி; ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் சுவாமி நம்மாழ்வாருக்கு வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.  இதையொட்டி நேற்று முன்தினம் 13ம் தேதி மாலை திருமுளைச்சாற்று கூரத்தாழ்­வான் சன்னதியில் இருந்து தேங்காய் வாங்கி வந்து விழா ஆரம்பமாயிற்று. அதன் பின்னர் நேற்று காலை 7 மணிக்கு மேல் ரிஷப லக்னத்தில் துவஜாரோஹணம் நடந்தது. 


இதையொட்டி காலையில் கும்ப பூஜை நடந்தது. பின்னர் நகர் வலம் வந்த கொடிப்பட்டம், மங்கள வாத்தியங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடிமரத்திற்கு அலங்காரம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இன்று முதல் 4ம் திருவிழா வரை சுவாமி ஒவ்வொரு வாகனத்தில் வீசி உலா வந்து அருள்பாலிக்கிறார். வரும் 18ம் தேதி 5ம் திருநாளன்று காலையில் நவதிருப்பதி எம் பெருமான்கள் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருக்கும் பூப்பந்தல் மண்டபத்தில் எழுந்தருளி பூ பந்தலில் சுவாமி நம்மாழ்வார் மங்களாசாசனம் நடக்கிறது. இரவில் நவதிருப்பதி பெருமான்கள் 9 கருட வாகனத்திலும், சுவாமி நம்மாழ்வார் தங்க அன்ன வாகனத்திலும், மதுரகவி ஆழ்வார் தங்கபரங்கி நார்காலியிலும் எழுந்தருளி திருவீதி உலா வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 22ம் தேதி 9ம் திருநாளன்று காலை சுவாமி நம்மாழ்வார் திருத்தேருக்கு எழுந்தருளி திருத்தேர் திருவிழா நடக்கிறது.


10ம் திருநாளன்று காலை மாடவீதி புறப்பாடு அன்று சிங்கபெருமாள் சன்னதியில் திருமஞ்சனம் முடித்து தாமிரபரணி நதியில் தீர்த்தவாரி நடக்கிறது. இரவில் சுவாமி பொழிந்து நின்ற பிரான் சுவாமி நம்மாழ்வார், ஸ்ரீ உடையவர் கோஷ்டியுடன் வெற்றிவேர் சப்பரத்தில் திருவீதி உலா வருதல் நடக்கிறது.  23 ம் தேதி பத்தாம் திருவிழாவை முன்னிட்டு காலை மாடவீதி புறப்பாடு, பின்னர் சிங்கபெருமாள் சன்னிதியில் திருமஞ்சனம் தாமிரபரணி நதியில் தீர்த்த வாரியும் பெரிய சன்னதிக்கு எழுத்தருளி கோஷ்டி, தீர்த்த வினியோகம் நடக்கிறது. வரும் 24 காலையில் சுவாமி நம்மாழ்வார், மத்மனவாள மாமுனிகள் சன்னதிக்கு எழுத்தருளி கந்த பொடி உத்ஸ்வம், திருமஞ்சனம் கோஷ்டி பல்லக்கில் சன்னதிக்கு எழுந்தருளி ஆஸ்தானம் எழுந்தருளுல் நடக்கிறது. இரவு பல்லக்கில் சுவாமி நம்மாழ்வார் வீதிஉலாவும், 25ம் தேதி விடையாற்றும் நடக்கிறது. கொடியேற்ற விழாவில் ஜீயர் சுவாமிகள், அகோபில மடம் ஜீயர் சுவாமிகள், அறங்காவலர் குழுதலைவர் ராமானுஜம் மற்றும் உறுப்பினர்கள் , ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜப்பா வெங்கடாச்சாரி, திருக்கோயில் நிர்வாக அதிகாரி சதீஷ் உட்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar