வள்ளியூர் முருகன் கோவில் தேரோட்டம் கோலாகலம்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மே 2024 11:05
வள்ளியூர்: வள்ளியூர் முருகன் கோயிலில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
வள்ளியூர் முருகன் கோயில் அறுபடை வீடுகளுக்கு இணையான கோயில் ஆகும். தென் மாவட்டங்களில் குகை கோயில்களில் சிறப்பு பெற்றது. வள்ளியூர் முருகன் கோயில் மலையை குடைந்து குகைக்குள் மூலவர் இருப்பதால் உள் பிரகாரம் இல்லாமல் கிரிவலம் வந்தால் தான் முருகரை சுற்ற முடியும் என்பது இந்த கோயிலின் சிறப்பு. இந்த கோயிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி, தெப்பம், தேரோட்டம் உள்ளிட்ட திருவிழாக்கள் நடக்கிறது. இந்த ஆண்டு தேரோட்ட திருவிழா சிறப்பாக நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. முன்னதாக காலை சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகன் எழுந்தருள ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்தனர்.