102 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த ஆக்ராவின் ‘சோமி பாக்’ திறப்பு; பக்தர்களுக்கு அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மே 2024 04:05
ஆக்ரா; ஆக்ராவில் கட்டப்பட்டுள்ள சோமி பாக் ஆன்மீக மற்றும் நவீன அற்புதங்களுடன் பக்தர்களை பரவசப்படுத்துகிறது.
தாஜ்மஹாலில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த ‘சோமி பாக். இது தாஜ்மஹால் போலவே இருப்பதாக கருதுகின்றனர். ஆக்ராவின் தயால்பாக் பகுதியில் இந்த சோமி பாக் நினைவு மண்டபம் உள்ளது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர். 52 கிணறுகளை அடித்தளமாக அமைத்து, அதற்கு மேல் 193 அடி உயரத்தில் ராஜஸ்தான் மக்ரானா பளிங்கு கற்கள் கொண்டு பிரமாண்டமாக இந்த மணிமண்டபம் கட்டப்படட்டுள்ளது. சோமி பாக் மணிமண்டபம் ராதாசோமி எனும் சமய மார்க்கத்தைத் தோற்றுவித்த தானி சுவாமிஜி மகராஜ் என்பவருக்கு வடிக்கப்பட்ட பிரம்மாண்டமான மாடமாக இது உள்ளது. 1922ம் ஆண்டு இந்து மணிமண்டபத்தின் கட்டுமான பணிகள் தொடங்கியது. 102 ஆண்டுகளாக கட்டுப்பட்டு வந்த சோமி பாக் மணிமண்டபம் தற்போது பக்தர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. ராதாசோமி சமய மார்க்கத்தின் தொண்டர்கள் பக்தியுடன் இந்த நினைவுச் சின்னத்தை வழிபட்டு வருகின்றனர்.