பாலமேடு; பாலமேடு இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோயில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட பால விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஜூன் 12ல் முதல்கால யாக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. இன்று காலை 2ம் கால யாக பூஜையை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.