ஆயக்குடி; பழநி அருகே 16 ஆம் நுாற்றாண்டு மதகு, கல்வெட்டு, சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பழநி அருகே காளிப்பட்டியில் உள்ள செங்குளத்தில் தொல்லியல் ஆய்வில் கல்வெட்டுடன் கூடிய சிதைந்து போன மதகு கண்டறியப்பட்டது. வடக்குப்பகுதி கரையோரம் இந்த மதகு அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது மதகு முற்றிலும் அழிந்துவிட்டது. குளத்திலிருந்து பாசனத்திற்காக நீரை வெளியேற்றும் குமுழித் துாம்பு உடைந்த நிலையில் இருந்தது. இந்த துாணில் 11 வரிகளுடன் ஒரு கல்வெட்டு பொறிக்கப்பட்டிருந்தது. அதில் கி.பி. 16 ம் நுாற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டு பசுவக் குடும்பன் ஆடி மாதம் 30 தேதி புதிதாக இக்குளத்தை வெட்டி மதகு அமைத்துக் கொடுத்தார் என்ற செய்தி குறிப்பிட்டிருந்தது. பசுவ குடும்பனும் அவர் மனைவி மஞ்சம்மாளும் குமுழித்துாணில் சிற்பமாக இருந்தனர். இங்கு தேங்கும் நீரை குமுழி மதகின் மூலமாக அருகில் உள்ள நிலங்களுக்கு பாசன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறினார்.