Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனி அமாவாசை; சதுரகிரியில் குவிந்த ... கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தில் 21 டன் அரிசியில் அன்ன பூஜை கன்னியாகுமரி விவேகானந்தா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காரமடை நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2024
03:07

மேட்டுப்பாளையம்; அமிர்தவர்ஷினி உடனமர் நஞ்சுண்டேஸ்வரர் கோவில், திருக்கல்யாண வைபவம் நடந்தது.


மேட்டுப்பாளையம் அருகே பெள்ளாதி ஊராட்சி சின்னத்தொட்டிபாளையத்தில் அமிர்தவர்ஷினி உடனமர் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் ஒன்பதாம் ஆண்டு விழாவை முன்னிட்டும், உலக நன்மைக்காகவும், கோவிலில் மூலமந்திர ஹோமவிதாந லட்சார்ச்சனையும், திருக்கல்யாணமும் நடந்தது. கடந்த இரண்டாம் தேதி கணபதி ஹோமத்துடன விழா துவங்கியது. மூன்றாம் தேதி சின்னதொட்டிபாளையம் விநாயகர் கோவிலில் இருந்து, மேளதாளத்துடன் தீர்த்த குடங்கள் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. நேற்று காலை விநாயகர் வழிபாடு, கோ பூஜை, புண்யாஹவாசனம், பஞ்சகவ்யம் பூஜை, கலசாபிஷேகம் ஆகிய பூஜைகள் நடந்தன. அதைத் தொடர்ந்து உலக நன்மைக்காகவும், கோவில் வளர்ச்சிக்காகவும் லட்சார்ச்சனை நடந்தது. இன்று  காலை மூல மந்திர மகா யாகமும், கலசாபிஷேகமும் நடைபெற்றது. 


அதை தொடர்ந்து சின்னதொட்டிபாளையம், சேரன் நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், சீர்வரிசை தட்டுகளை கோவிலுக்குச் கொண்டு வந்தனர். மதியம் 12:15 மணிக்கு நஞ்சுண்டேஸ்வரருக்கும், அமிர்தவர்ஷினிக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திருமாங்கல்யம் அணிவித்த பின், சுவாமிகளுக்கு பால், பழம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அர்ச்சகர்கள் பூப்பந்து, தேங்காய் ஆகியவற்றை உருட்டி விளையாடினர். அதை தொடர்ந்து மகாதீபாராதனைக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. லட்சார்ச்சனை, திருக்கல்யாணம் வைபவத்தை, சிவகிரி கண்ணன் சுவாமியின் தலைமையில், 15 அர்ச்சர்கள் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இன்று பிரதோஷம் வருவது சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதோஷம் ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்றோர்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar