பிதுர் வழிபாட்டுக்குரியநாள் மகாளய அமாவாசை. பிதுர்லோகத்தில் இருந்து நம் முன்னோர் ஆண்டு தோறும் புரட்டாசி மகாளய பட்சத்தில் பூலோகம் வந்து பதினைந்து நாட்கள் தங்கியிருப்பதாகவும், மகாளய அமாவாசையன்று மீண்டும் பிதுர்லோகம் புறப்படுவதாகவும் ஐதீகம். இந்நாளில் தீர்த்த ஸ்நானம் செய்வது, தர்ப்பணம் கொடுப்பது, பசுவுக்கு கீரை கொடுப்பது, காகத்திற்கு உணவளிப்பதன் மூலம் பிதுர்களின் ஆசி நமக்கு கிடைக்கும்.