கங்கையின் மேலான காவிரி தீர்த்தம் என்று ஆழ்வாரின் பாசுரங்கள் காவிரியின் பெருமையைப்போற்றுகின்றன. காவிரியைத் தீர்த்தமாக கொண்ட தேவாரத்தலங்கள், விஷ்ணுத்தலங்கள் பல உள்ளன. ஆடிப்பெருக்கன்று பெண்கள் சுமங்கலி பாக்கியம் பெற காவிரியில் நீராடி வழிபடுவது வழக்கம். ஐப்பசியில் துலாஸ்நானம் செய்ய சிவபார்வதியே காவிரிக்கு எழுந்தருள்வதாக ஐதீகம். அதனால், புனிதமான காவிரியில் நீராடினால் நம் பாவம் நிச்சயம் நீங்கும்.