அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் ஆடி தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2024 11:07
மதுரை; அழகர் கோயிலில் ஆடி திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள உலக பிரசித்திப்பெற்றதும், 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் ஆடிப் பௌர்ணமி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கி சிறப்பாக நடைபெற்று வந்தது. இதனைத்தொடர்ந்து, 17ம் தேதி புதன்கிழமை கள்ளழகர் தங்க பல்லக்கில் சிவகங்கை சமஸ்தான மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும். 20ம் தேதி சனிக்கிழமை தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதையடுத்து, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம். இன்று ஆடிப் பௌர்ணமியான ஜூலை 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6: 45 மணியிலிருந்து 07.20 மணிக்கு துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர். தொடர்ந்து மாலை, அழகர்கோவில் ஶ்ரீ கள்ளழகர் திருக்கோவிலின் காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பண்ண சாமி திருக்கதவுகள் திறக்கப்பட்டு படி பூஜைகளும், தொடர்ந்து சந்தனக்காப்பு அலங்கார தீபாராதனை நடைபெற உள்ளது. இதையடுத்து, வரும் 23ம் தேதி செவ்வாய்க்கிழமை உற்சவ சாந்தி நிகழ்ச்சியுடன், பத்து நாட்கள் நடைபெறும் ஆடிப் பெருந்திருவிழா நிறைபெற உள்ள நிலையில், விழாவிற்கான ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகத்துடன் தொடங்கி உள்ளதாகவும், திருக்கோவில் நிர்வாகம் சார்பில் திருக்கோவில் செயல் அலுவலர் மற்றும் துணை ஆணையரான கலைவாணன் அறிவித்துள்ளார்.