நெட்டேரி முத்தாலம்மன் கோவிலில் ஊஞ்சல் சேவை உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2024 11:07
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் நெட்டேரி கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் ஆடித் திருவிழா நேற்று முன்தினம், காலை 9:00 மணிக்கு, 108 பால்குட ஊர்வலத்துடன் துவங்கியது. மாலை 6:00 மணிக்கு, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இரண்டாம் நாள் உற்சவமான நேற்று மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. உற்சவர் அம்மன் ஊஞ்சல் சேவை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று, காலை 7:00 மணிக்கு முத்தாலம்மனுக்கு அபிஷேகம், சர்வதீர்த்த குளக்கரையில் இருந்து அம்மனுக்கு கரக அலங்காரம் வீதியுலா நடந்தது. மதியம் 1:00 மணிக்கு கூழ்வார்த்தலும், மாலை 3:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்தலும், இரவு 8:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும், நடக்கிறது. நாளை, காலை 6:00 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாநடக்கிறது.