பதிவு செய்த நாள்
25
ஜூலை
2024
11:07
சேலம்; சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழாவுக்கு கடந்த, 7ல் முகூர்த்தக்கால் நடப்பட்டது. நேற்று முன்தினம் பூச்சாட்டுதல் நடந்தது. நேற்று கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் செய்யப்பட்டன. யாகமும் நடந்தது. காலை, 10:00 மணிக்கு மேல் கொடியேற்றப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வரும், 29 வரை தினமும் இரவு, 8:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா நடக்கிறது. 30 இரவு, 8:00 மணிக்கு கம்பம் நடுதல், திருக்கல்யாணம், ஆக., 3 இரவு, 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், 5 இரவு சக்தி அழைப்பு, 8, 9ல் பொங்கல், உருளுதண்டம், 10ல் பவானி ஆற்றில் கம்பம் விடுதல், 11 இரவு சப்தாபரணம், 12 மதியம் மஞ்சள் நீராட்டுதல் நடக்க உள்ளது.