பதிவு செய்த நாள்
25
ஜூலை
2024
11:07
அச்சிறுபாக்கம்; அச்சிறுபாக்கம் அருகே வெங்கடேசபுரம் கிராமத்தில், பழமைவாய்ந்த பூர்ணபுஷ்கலா உடனுறை அய்யனாரப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் செய்வதற்காக, கோவில் கோபுரம் புதுப்பிக்கப்பட்டு, பஞ்ச வர்ணங்கள் பூசி புனரமைக்கப்பட்டது. நேற்று முன்தினம், மங்கல இசையுடன், விக்னேஸ்வரர், லட்சுமி, நவகிரகம், கணபதி மற்றும் கோ பூஜையுடன் சிறப்பு பூஜைகள் துவங்கின. அதைத் தொடர்ந்து, மூன்று கால பூஜைகள் நடந்தன. நேற்று காலை, யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை, சிவாச்சாரியார்கள் கோவில் கோபுர கலசத்திற்கு ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் செய்தனர். இதில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.