Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news யாகத்தை பார்த்தாலே புண்ணியம் ஆடி ... மேட்டுப்பாளையம் நந்தவனத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திதி கொடுத்தனர் மேட்டுப்பாளையம் நந்தவனத்தில் 10 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக நன்மைய வேண்டி பிரத்யங்கிராதேவி யாகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உலக நன்மைய வேண்டி பிரத்யங்கிராதேவி யாகம்

பதிவு செய்த நாள்

04 ஆக
2024
11:08

கோபால்பட்டி, சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான்பாறை ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் ஆடி மாத அமாவாசையான நேற்று நடந்த பிரத்தியங்கிரா தேவி மிளகாய் யாகத்தை சபையின் நிர்வாகி டாக்டர் திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் செய்து வைத்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

இதையொட்டி காலை முதல் சபையில் வளர்க்கப்படும் 50க்கும் மேற்பட்ட பல்வேறு வகை நாட்டு மாடுகளுக்கு பக்தர்கள் அகத்திக்கீரை உணவுகள் வழங்கி கோ பூஜை நடந்தது.தொடர்ந்து மாலையில் மடத்தில் உள்ள யாகசாலையில் நரசிம்மர் கலசங்களுக்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பிரத்தியங்கிரா தேவி அம்மன் பூக்கள் அலங்காரத்தில் எழுந்தருள சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து சபையின் நிர்வாகி டாக்டர் திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் வேத மந்திரம் முழங்க யாகுண்டத்தில் மூட்டை மூட்டையாக மிளகாய் வத்தலை கொட்ட பிரத்தியங்கிரா தேவி யாகம் உலக நன்மை வேண்டி நடத்தப்பட்டது. இதில் மதுரை, தேனி, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை பனை ஓலையில் எழுதி யாக குண்டத்தில் போட்டு பூஜை செய்தனர். வெளிமாநில மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் இணையதளம் மூலமாக பூஜையில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar