Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புத்தூர் ராஜகாளியம்மன் ... திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆடிப்பூர பிரம்மோற்சவம்; தீர்த்தவாரியுடன் நிறைவு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அந்தியூர் குருநாதசுவாமி கோவிலில் ஆடி தேர்த்திருவிழா கொண்டாட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அந்தியூர் குருநாதசுவாமி கோவிலில் ஆடி தேர்த்திருவிழா கொண்டாட்டம்

பதிவு செய்த நாள்

07 ஆக
2024
05:08

அந்தியூர்; தேர்த்திருவிழாவை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம், அந்தியூர் புதுப்பாளையத்தில் இருந்து வனக்கோவிலை நோக்கி காமாட்சியம்மன் சிறிய சப்பரத்திலும், அதை தொடர்ந்து பெருமாள் சுவாமி, குருநாத சுவாமிகள், 60 அடி மகமேரு தேரில், மக்கள் வெள்ளத்தில் எழுந்தருளினர்.


தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற, ஈரோடு மாவட்டம், அந்தியூர், புதுப்பாளையத்தில் உள்ள குருநாதசுவாமி கோவில் பண்டிகை, ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டு பூச்சாட்டுதல் விழா கடந்த மாதம், 17ல், துவங்கியது. 24ல், கொடியேற்றுதல் நிகழ்ச்சியும், 31 முதல் வன பூஜையும் நடந்து வந்தது. முக்கிய நிகழ்வான நேற்று காலை, 10:30 மணிக்கு புதுப்பாளையத்தில் உள்ள குருநாதசுவாமி கோவிலில் இருந்து, காமாட்சியம்மன் சிறிய சப்பர தேரிலும், பெருமாள், குருநாதசுவாமி, 60 அடி மகமேரு தேரிலும் என, மூன்று தேர்களையும் பக்தர்கள் தோளில் சுமந்தபடி, வனக்கோவிலுக்கு கொண்டு வந்தனர். வழிநெடுகிலும் சாலையின் இருபுறங்களில், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வரும், 14ல், பால் பூஜையுடன் பண்டிகை நிறைவடைகிறது. தேர்த்திருவிழாவை காண, ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி, வெளி மாவட்டம், கர்நாடகா மாநிலங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


ஆடிப்பெருந்தேர் திருவிழாவை தொடர்ந்து, கால்நடை சந்தை, பறவை கண்காட்சி, பொழுது போக்கு அம்சங்களுடன் பண்டிகை தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பலத்த மழை பெய்தது. இதனால், பண்டிகை துவங்கிய நேற்று, கால்நடை சந்தை வளாகம் முழுவதும் சேறும், சகதியுமாக மாறியது. இதனால் பொதுமக்கள், கால்நடை சந்தை நடைபெறும் பகுதிகளுக்கு சென்று வர சிரமப்பட்டனர். அந்த பகுதிகளில் பொதுமக்களின் வருகை மிகவும் குறைவாக இருந்தது. அந்தியூரில் நடைபெறும் குதிரை சந்தை மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குதிரைகளை விற்பனைக்கு கொண்டு வருவர். நேற்று முன்தினமும், நேற்றும் மழை பெய்ததால் குதிரை வியாபாரம் ‘டல்’ அடித்தது. சிறிய குதிரை, 30 ஆயிரம் முதல், 2 லட்சம் ரூபாய் வரையும், பெரிய குதிரைகள் 80 ஆயிரம் முதல், 40 லட்சம் ரூபாய் வரையும் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இந்நிலையில் நேற்று மதியம், 2:30 மணிக்கு மீண்டும் துவங்கிய கன மழை அரை மணி நேரம் நீடித்தது. இதனால் இந்த பகுதி இன்னும் சகதிக்காடாக மாறியது. இதனால் கால்நடை சந்தை நடக்கும் பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைந்தது. மேலும் ராட்டின துாரிகள், பறவை கண்காட்சியை காண மக்கள் ஆர்வம் காட்டவில்லை. மழையால் கால்நடை சந்தை வியாபாரம் பாதித்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் அருகே பழமையும் புரதான சிறப்பும் பெற்ற ... மேலும்
 
temple news
கோவை ;  காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு  ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி பாலமுருகன் கோவிலில் சத்ரு சம்ஹார திரிசதி வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் இரவில், ஸ்ரீ மலையப்ப சுவாமி ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் சென்று வர பயன்படும் ரோப் கார் சேவை பக்தர் மேம்பாட்டிற்கு துவங்கப்பட்டது.பழநி முருகன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar