திருப்புத்தூர் ராஜகாளியம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஆக 2024 05:08
திருப்புத்தூர்; திருப்புத்தூர் ராஜகாளியம்மன் கோயிலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு அம்மியில் பெண்கள் மஞ்சள் அரைத்து அம்மனுக்கு சார்த்தினர். திருப்புத்தூரின் மேற்கு எல்லை காவல் தெய்வமாக ராஜகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. இன்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு காலை 8:00 மணி அளவில் விரதமிருந்த பெண்கள் அம்மியில் மஞ்சள் அரைத்து அம்மனுக்கு வழங்கினர். மேலும் தொடர்ந்து பெண்கள் வளையல் சமர்ப்பித்து அம்மனை வழிபட்டனர். மூலவர் அம்மனுக்கு பால், சந்தனம், தயிர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேக, ஆராதனை நடந்தது. பின்னர் பக்தர்கள் அரைத்த மஞ்சளால் காளியம்மன் முகம், அங்கம் முழுவதும் மஞ்சள் பூசப்பட்டு வளையல் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து அலங்காரத் தீபாராதனை காட்டப்பட்டது. அம்மனுக்கு சாத்தப்பட்ட மஞ்சள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.