பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை ஒட்டி புதியதாக சிங்க வாகனம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி ஹோமக் குண்டம் அமைக்கப்பட்டு, 108 மூலிகைகளால் வேள்வி நடந்தது. தொடர்ந்து, சிங்க வாகனத்துக்கு கண் திறத்தல் நிகழ்ச்சியும், புனித நீர் உள்ள தீர்த்த குடங்கள் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டன. பின்னர், சிங்க வாகனத்துக்கு தீர்த்த குடங்களால் தண்ணீர் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு, அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. விழாவையொட்டி கும்பம், பூக்கூடை, வெற்றிலை, பாக்கு, பழ வகைகள் அடங்கிய தட்டுக்கள் வைத்து, சுற்று பூஜைகள் நடந்தன. அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி தேவேந்திரன் மற்றும் பவுர்ணமி குழு, மூலஸ்தான குழு நிர்வாகிகள் செய்து இருந்தனர். விழாவில், 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர்.