Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மனதை மாற்றிய விவேகானந்தர் சிவன் கோயில்களில் அம்மன் சந்நிதி ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
காலம் பொன்னானது கடமை கண்ணானது!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2012
12:11

உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் நேரம் பொன்னானது என்பதை உணர வேண்டும்.  இதோ, காந்திஜியின் வாழ்வில் நடந்த சம்பவம். ஒரு பேராசிரியர் காந்திஜியை சந்திக்க ஆஸ்ரமத்துக்கு வந்தார். அங்கே ஒரு முதியவர் பெருக்கிக் கொண்டிருந்தார். நான் மகாத்மாஜியைப் பார்க்க வேண்டும். நான் வந்திருப்பதாகச் சொல், என தன்னைப் பற்றி அறிமுகப் படுத்திக் கொண்டார். ஐயா! காந்தி நேரப்படி நடப்பவர். தாங்கள் காத்திருங்கள். 11 மணிக்கு நிச்சயம் உங்களைச் சந்திப்பார். பேராசிரியருக்கு கோபம் வந்து விட்டது. ஒரு வேலைக்காரன் இப்படி பேசுகிறானே! மேலும், பேராசிரியரான நானே காந்திஜியை மகாத்மா என்கிறேன். இவன் காந்தி என மரியாதைக் குறைவாக அவரைக் குறிப்பிடுகிறானே! கோபத்துடன் அவர், ஏய்! நான் வந்திருப்பதை அவரிடம் சொல்லப்போகிறாயா இல்லையா? வீணாகக் காக்க வைக்காதே. அப்போதும், அந்த முதியவர் பெருக்கியபடியே, ஐயா! சற்று அமருங்கள். காந்தி நேரம் தவறாதவர். 11மணிக்கு நிச்சயம் சந்திப்பார், எனவும் பேராசிரியர் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார். நல்லவேளையாக அந்த நேரம் பார்த்து கடிகாரம் 11 மணியைக் காட்டியது. பெருக்கிக் கொண்டிருந்த முதியவர், அவரை நோக்கி வந்தார். ஐயா! சொல்லுங்கள், நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? நான் சொன்னது உன் காதில் விழவில்லையா? காந்திஜியை சந்திக்க வேண்டும்,. நான் தான் அந்த காந்தி. உங்களுக்கு வேண்டியதைக் கேளுங்கள், என்றார். பேராசிரியர் அதிர்ந்து விட்டார். மகாத்மாவிடம் மன்னிப்பு கேட்டார். நேரம் தவறாமல் கடமையாற்றியவர் காந்திஜி. அதனால் தான் விலை ஒப்பிட முடியாத சுதந்திரக்கனியை நம்மிடம் பறித்துக் கொடுத்தார். இனியேனும் காலத்தை பொன் எனவும், கடமையைக் கண் எனவும் போற்றி வெற்றிக்கனிகளைப் பறிப்போமா!

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar