மாங்காய் புளிக்கிறது. மாம்பழம் இனிக்கிறது. காயாக பக்குவமில்லாமல் இருக்கும் நாம், பக்தியால் கனிந்து முக்தி பெற வேண்டும் என்பது தாத்பர்யம். ஆனால், இது எல்லாருக்கும் பொருந்துவதில்லை, புரிவதுமில்லை. உலகவாழ்வில் நாம் எதிர்பார்க்கும் விஷயங்களில் காய் நிலைமாறி கனிந்து பலன் பெற இறையருள் வேண்டும் என்பதற்காக கனிவகைகளைப்படைத்து வழிபடுகிறோம்.