திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் புதுச்சேரி கவர்னர் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஆக 2024 11:08
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் நேற்று புதுச்சேரி கவர்னர் கைலாசநாதன் சுவாமி தரிசனம் செய்தார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வரபகவான் தனி சன்னதியில் அருள்பலித்து வருகிறார்.இக்கோவிலில் நேற்று புதுச்சேரி கவர்னர் கைலாசநாதன் சுவாமி தரிசனம் செய்தார்.முன்னதாக காரைக்காலுக்கு அரசு முறை பயணமாக வருகைப்புரிந்தார் இவரை மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிமைப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் திருமுருகன்,கலெக்டர் மணிகண்டன் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர். பின்னர் போலீசார் மரியாதையை கவர்னர் ஏற்றுக்கொண்டார். பின்னர் கவர்னர் கைலாசநாதன் திருநள்ளாறு கோவிலுக்கு வருகை புரிந்த இவரை கோவில் நிர்வாகம் சார்பில் அருணகிரிநாதன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் கவர்னர் கைலாசநாதன் தர்ப்பாரண்யேஸ்வரர்.விநாயகர், முருகன்,அம்பாள் உள்ளிட்ட சுவாமிகளை தரிசனம் மேற்கொண்டு பின்னர் கவர்னர் சனீஸ்வரபகானுக்கு சிறப்பு பூஜை செய்து 9தீலதீபம் ஏற்றி காக்கைக்கு எள்ளுசாதம் வழங்கி பகவானை பக்தி பரவசத்துடன் கவர்னர் கைலாசநாதன் சிறப்பு பூஜை செய்தார்.உடன் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான்,சீனியர் எஸ்.பி.,மனீஷ்,எஸ்.பி.,பாலசந்தர்,சுப்ரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.கவர்னர் வருகையொட்டி பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.