Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் ... சுந்தரராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கணியாம்பூண்டி விழா கோலம் சுந்தரராஜ பெருமாள் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விழுப்புரம் லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில் தீபம் ஏற்றி வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விழுப்புரம் லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில் தீபம் ஏற்றி வழிபாடு

பதிவு செய்த நாள்

16 செப்
2024
10:09

விழுப்புரம்; ப.வில்லியனூர் ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில் சிரவண தீபம் ஏற்றி வழிபாடு நடந்தது.


விழுப்புரம் அடுத்த ப.வில்லியனூரில், கல்யாண தடை நீக்கும் பிரசித்தி பெற்ற கனகவல்லி நாயகா சமேத லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில் சிரவண தீபம் ஏற்றி வழிபாடு நடந்தது. திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு மூலவர் பெருமாளுக்கும், உற்சவர் பெருமாளுக்கும் திருமஞ்சனம் நடந்தது. இதனைத் தொடர்ந்து, மூலவர் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கனகவல்லி தாயார் உடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, உற்சவர் பெருமாளுக்கும் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனையுடன், காலை 9:00 மணிக்கு திருவீதியுலா புறப்பாடு நடந்தது. தொடர்ந்து மாலை 4:00 மணிக்கு உறியடி உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு உறியடித்து கொண்டாடினர். தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு சிரவண தீபம், கருட கம்பத்தில் ஏற்றப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar