கோவை கருமாரியம்மன் கோவிலில் செவ்வாய் சிறப்பு வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01அக் 2024 10:10
கோவை ; கோவை, நேரு ஸ்டேடியம் ஆடிஸ்வீதி தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் வெள்ளி காப்பு கவசத்துடன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் தீபஒளியில் அம்மன் அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேவி ஸ்ரீ கருமாரியம்மனை தரிசனம் செய்தனர்.