வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழா அக்., 3ல் ஆனந்தவல்லி அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது. அக்., 12ல் அம்பு போடுதல் நடக்கிறது.
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆனந்தவல்லி அம்மனுக்காக, நவராத்திரி திருவிழா பத்து நாட்கள் நடக்கும். இதனை தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மலைக்கு வந்து தங்கி வழிபட்டு விரதம் கடைபிடிப்பர் . இந்தாண்டு அக்., 3 அதிகாலை 5:00 மணிக்கு ஆனந்தவல்லி அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் நவராத்திரி பூஜைகள் துவங்குகிறது. அதனைத் தொடர்ந்து தினமும் இரவு 6:00 மணிக்கு மேல் கொலு பஜனை சிறப்பு வழிபாடு நடக்கிறது. அக். 11 இரவு 7:00 மணிக்கு சரஸ்வதி பூஜையும், அக். 12ல் விஜயதசமி மற்றும் அம்பு போடுதலும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஏழூர் சாலியர் சமூகத்தினர், அறநிலையத் துறையினர் செய்துள்ளனர். நவராத்திரி திருவிழாவின் அனைத்து நாட்களிலும் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.