பதிவு செய்த நாள்
05
அக்
2024
11:10
மதுரை; மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் புரட்டாசி பிரம்மோற்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. அழகர்கோவில் கள்ளழகர் கோயிலின் நிர்வாகத்தில் உள்ள இக்கோயிலில் இணை கமிஷனர் செல்லத்துரை முன்னிலையில் காலை 9:20 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. சுவாமி, ஸ்ரீதேவி பூமா தேவியுடன் காட்சியளித்தார். அக். 13 வரை தினமும் காலை, மாலையில் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி அலங்காரம் செய்யப்பட்டு புறப்பாடு நடைபெறும். தெப்ப உற்ஸவம் அக். 14ல் காலை 9:45 மேல் 10:30 மணிக்குள்ளும், மாலை 6:00 மணிக்கு பிறகும் நடக்கிறது. அக். 15ல் உற்ஸவ சாந்தியுடன் பிரம்மோற்ஸவ விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை அறங்காவலர்கள் பாண்டியராஜன், செந்தில்குமார், ரவிக்குமார், மீனாட்சி பிரியா,, அறங்காவலர் குழுத் தலைவர் பிரதிநிதி நல்லதம்பி, கண்காணிப்பாளர்கள் பாலமுருகன், அருட்செல்வன், பிரதீபா, பி.ஆர்.ஓ., முருகன் செய்து வருகின்றனர்.