ஏழரைச்சனி நடப்பவர்கள் சனியின் பாதிப்பிலிருந்து தப்பிக்க என்ன வழி?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24நவ 2012 10:11
காலை அல்லது மாலையில் பின்வரும் ஸ்லோகத்தை 108 முறை பாராயணம் செய்யுங்கள். இயலாவிட்டால் குறைந்தபட்சம் 12 முறையாவது சொல்லுங்கள். ""நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம் சாயா மார்த்தாண்ட சம்பூதம் தம் நமாமி சனைச்சரம் பஹு சம்சாரி பாவம் செய்யும் கொடியவர்களையும், தன்னை எதிர்த்து நாத்திகம் பேசுபவர்களையும் கூட கடவுள் வெறுப்பதில்லை. அவர்கள் திருந்த வேண்டும் என்று மட்டுமே அவர் எதிர்பார்க்கிறார். ""அப்பனே! தெரியாத்தனமாக இவ்வளவு காலம் பாவம் செய்து விட்டேன். என்னை மன்னித்துவிடு! என்று உள்ளம் உருகினால் போதும். ஏற்று அருள்புரிய ஓடிவருவார். குணம் கெட்ட பிள்ளையை வெறுக்காமல் அன்பு காட்டி திருத்த முயற்சிக்கும் தாயாக அவர் இருக்கிறார். அந்த குணத்தை "வாத்சல்யம் என்று குறிப்பிடுவர். உலகில் உள்ள அனைத்து உயிர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. அதன் தலைவராக இருப்பவர் கடவுள். அதனால், அவரை "பஹு சம்சாரி என்பர். இதற்கு "பெரிய குடும்பஸ்தன் என பொருள்.