Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீபுரத்தில் உள்ள தங்க நாராயணி ... திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா துவங்கியது திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது; பக்தர்கள் குவிந்தனர்
எழுத்தின் அளவு:
பழநியில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது; பக்தர்கள் குவிந்தனர்

பதிவு செய்த நாள்

02 நவ
2024
04:11

பழநி; பழநி கோயிலில் காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.

பழநி கோயிலில் காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி திருவிழா இன்று (நவ.2) துவங்கியது. கோயில் யானை கஸ்தூரி காலையில் மலைகோயில் வந்தது. கோயிலில் உச்சிக்கால பூஜை மதியம் 12:00 மணிக்கு நடைபெற்றது. விநாயகர், மூலவர், சண்முகர், வள்ளி, தேய்வானை , துவாரபாலகர்கள், மயில் வாகனம், நவவீரர்கள் ஆகியவற்றிற்கு அமிர்தலிங்க குருக்கள், செல்வ சுப்பிரமணிய குருக்கள் தலைமையில் மதியம் 1:00 மணிக்கு மேல் காப்பு கட்டப்பட்டது.

கோயிலில் பழநியாண்டவர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்தனர். நிகழ்ச்சியில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். திருஆவினன்குடி கோயிலில் மூலவர், உற்சவருக்கு காப்பு கட்டப்பட்டது. அதன்பின் பக்தர்கள் சஷ்டி விரதம் துவங்கினர். விழாவில் சாயரட்சை பூஜைக்கு பின் தங்கச்சப்பர புறப்பாடு, தங்கரத புறப்பாடு நடைபெறும்.  கந்த சஷ்டி விழா துவக்கத்தை முன்னிட்டு வெளி மாநில, வெளியூர் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். ரோப்கார் பராமரிப்பு பணி காரணமாக செயல்படாததால், வின்ச் வரிசையில் பல மணி நேரம் காத்திருந்தனர். தரிசன வரிசையில் மூன்று மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர். வெயில் காரணமாக தரிசன வரிசையில் நின்று வந்த பக்தர்கள் குடை பிடித்து நின்றிருந்தனர்.

சூரசம்ஹாரம்: ஆறாம் நாள், நவ.7ல் சூரசம்ஹாரம் நடைபெறும். அன்று மலைக் கோயிலில் அதிகாலை விஸ்வரூப தரிசனம், விளாபூஜை, மதியம் உச்சிக்காலபூஜை, சாயரட்சை பூஜை நடைபெறும். மதியம் 3:10 மணிக்கு மேல் மலைக்கொழுந்து அம்மன் சன்னதியில் பராசக்தி வேல் வாங்குதல் நிகழ்ச்சிக்கு பின் சன்னதி அடைக்கப்படும். கோயிலில் இருந்து சின்னகுமாரசுவாமி, பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து வள்ளி,தெய்வானை, முத்துக்குமாரசுவாமி, அடிவாரம் எழுந்தருள்வார். பக்தர்கள் கோயிலுக்கு காலை 11.00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அன்று இரவு தங்கரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறாது. மாலை 6.00 மணிக்கு மேல் கிரிவீதியில் சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெறும். அதில் வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன், கிழக்கு கிரி வீதியில் பானுகோபன், தெற்கு கிரிநிதியில் சிங்கமுகாசூரன், மேற்கு கிரி வீதியில் சூரபத்மன் ஆகிய நான்கு சூரர்களை வதம் செய்ய சின்ன குமாரசுவாமி எழுந்தருள்வார். அதன் பின் இரவு ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழா நடைபெறும். சுவாமி மலைக்கோயிலுக்கு வந்தவுடன் வழக்கப்படி ஸம்ப்ரோக்ஷன பூஜைகள் நடைபெற்று இராக்கால பூஜை நடைபெறும்.

திருக்கல்யாணம்: ஏழாம் நாள், நவ.8ல் மலைக்கோயிலில் திருக்கல்யாண மண்டபத்தில் வள்ளி,தெய்வானை சண்முகருக்கு திருக்கல்யாணம் நடைபெறும். அன்று மாலை பெரியநாயகி அம்மன் கோயிலில் வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்று, சுவாமி தங்க குதிரையில் திருஉலா நடைபெறும். பக்தர்கள் சஷ்டி விரதம் முடிப்பர். விழா நாட்களில் மலைக்கோயில் திருக்கல்யாணம் மண்டபத்தில் சமய சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்: தமிழ்ப் புத்தாண்டையொட்டி, விழுப்புரம் ஆஞ்சநேயர் குளக்கரையில் உள்ள 90 அடி ஸ்ரீ ஜெய ஜெய ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த செம்மேடு காசிவிஸ்வநாதர், வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 12ம் தேதி ... மேலும்
 
temple news
உடுமலை  ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ... மேலும்
 
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar