Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் கந்த சஷ்டி விழா காப்பு ... கூடல் சுந்தரவேலர் கோயிலில் கந்த சஷ்டி விழா துவங்கியது கூடல் சுந்தரவேலர் கோயிலில் கந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா துவங்கியது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா துவங்கியது

பதிவு செய்த நாள்

02 நவ
2024
04:11

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு நிகழ்ச்சியுடன் துவங்கியது.

கோயிலில் காலை 8:30 மணிக்கு கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அனுக்கை விநாயகர் முன்பு யாக பூஜை நடந்தது. ‌தொடர்ந்து மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக் கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாளுக்கு பூஜை முடிந்து விசாக கொறடு மண்டபத்தில் யாகசாலை பூஜை தொடங்கியது. சுவாமிக்கு காப்பு கட்டுதல்: முதலில் ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானை, பின்பு உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு காப்பு கட்டப்பட்டது. திருவிழா நம்பியார் சிவாச்சாரியாருக்கு காப்பு கட்டப்பட்டபின்பு விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு சிவாச்சாரியார்கள் காப்பு கட்டினர். காப்பு கட்டிக்கொண்ட பக்தர்கள் திருவிழா நடக்கும் 7 நாட்களிலும் கோயில் மண்டபங்களில் தங்கி விரதம் மேற்கொள்வர். தினம் உச்சிகால பூஜை முடிந்த பின்பு விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு தேன், சர்க்கரை கலந்த தினை மாவு, மாலையில் சர்க்கரை, எலுமிச்சம்பழச் சாரும், இரவு பாலும் இலவசமாக வழங்கப்படும்.

சூரசம்ஹாரம்: தினம் இரவு 7:00 மணிக்கு தந்த தொட்டி விடையாத்தி சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி கோயில் திருவாட்சி மண்டபத்தை ஆறுமுறை வலம் சென்று அருள் பாலிப்பார். தினம் காலை 8:30 மணிக்கு யாகசாலை பூஜையும், காலை 11:00 மணி, மாலை 5:00 மணிக்கு சண்முகார்ச்சனையும் நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நவ. 6ல் வேல் வாங்குதல், நவ. 7ல் சூரசம்ஹார லீலை, நவ. 8 காலையில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் சட்டத் தேரில் எழுந்தருளி ரதவீதிகள் , கிரிவீதியில் தேரோட்டம், மதியம் 3:00 மணிக்கு மூலவர் முன்பு தயிர் சாதம் படைக்கப்பட்டு பாவாடை நைவேதன தரிசனம் நடக்கும். காப்பு கட்டும் நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் மணி செல்வம், பொம்ம தேவன், சண்முகசுந்தரம், ராமையா, துணை கமிஷனர் சூரிய நாராயணன் கலந்து கொண்டனர். கலெக்டர் சங்கீதா கோயிலில் சுவாமி தரிசனம் முடித்து சண்முகார்ச்சனையில் பங்கேற்றார்.

திருநகர்: சித்தி விநாயகர் கோயிலில் சஷ்டி திருவிழா துவங்கும் வகையில் மூலவர் முருகப்பெருமானுக்கு மஹா அபிஷேகம், உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத கல்யாண முருகப் பெருமானுக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, சத்ரு சம்ஹார த்ரிசதி அர்சாசனை நடந்தது. நவ. ல் வேல் வாங்குதல், சூரசம்ஹாரம், நவ. 8ல் சீர்தட்டு அழைத்தல் , திருக்கல்யாணம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு  ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் இரவில், ஸ்ரீ மலையப்ப சுவாமி ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் சென்று வர பயன்படும் ரோப் கார் சேவை பக்தர் மேம்பாட்டிற்கு துவங்கப்பட்டது.பழநி முருகன் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில், வருடாந்திர பிரம்மோற்சவத்தை ஒட்டி இன்று ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெறும் வெங்கடேஸ்வரப் பெருமானின் வருடாந்திர சலகட்ல பிரம்மோற்சவத்தின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar