பதிவு செய்த நாள்
04
நவ
2024
12:11
கமுதி; கமுதி அருகே நீராவி கரிசல்குளம் கிராமத்தில் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழாவை முன்னிட்டு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. முன்பாக கோயிலில் விக்னேஸ்வர பூஜை, புண்மையாகவாசனம், மகா கணபதி ஹோமம், திரவியாஹீதி, பூர்ணாஹீதி, கோபூஜை தீபாரதனை சிறப்புபூஜை நடந்தது. பின்பு கோயில் முன்பு காப்பு கட்டப்பட்டது. மூலவரான சுப்ரமணிய சுவாமிக்கு பால்,தயிர்,மஞ்சள்,சந்தனம்,இளநீர் உட்பட 16 வகையான அபிஷேகம், தீபாராதனை நடந்தது.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நவ.7ல் கந்தசஷ்டி சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும், நவ.8ல் தெய்வானை அம்பாளுக்கும், சுப்பிரமணிய சுவாமிக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தினந்தோறும் சிறப்புஅபிஷேகம் அலங்காரம் நடைபெறும். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நீராவி கரிசல்குளம் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் பாதயாத்திரை பக்தர்களுக்கு குழு, திருப்பணி கமிட்டினர் மற்றும் கிராம மக்கள் செய்தனர்.விழாவில் கமுதி அதனை சுற்றியுள்ள கிராமமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.