வராகி அம்மனுக்கு வெள்ளி சிறப்பு அபிஷேகம்; மஞ்சள் அரைத்து பக்தர்கள் வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29நவ 2024 04:11
பரமக்குடி; பரமக்குடி சத்தேழு கன்னிமார் கோயிலில் அருள் பாலிக்கும் வராகி அம்மனுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேகம் நடந்தது. பரமக்குடி அனுமார் கோயில் பின்புறம் உள்ள இக்கோயிலில் வராகி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இங்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பன்னீர், பால் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இன்று காலை அபிஷேகம் நிறைவடைந்து அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டார். பின்னர் தீப ஆராதனைகள் நிறைவடைந்து பக்தர்களுக்கு மஞ்சள் மற்றும் குங்கும பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பெண்கள் பலரும் மஞ்சள் அரைத்துக் கொடுத்து அம்மனை வழிபட்டனர்.