பதிவு செய்த நாள்
29
நவ
2024
04:11
கோவை; சிறுமுகை அருகில் உள்ள இலுப்பநத்தம் லட்சுமி நரசிங்க பீடம், ஆபத்பாந்தவ ஸ்ரீ தயாவல்லி தாயார் சன்னதியில் கார்த்திகை மாத சுவாதி நட்சத்திர வைபவம் நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி நரசிம்மர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவானது விஷ்வக்ஷேன ஆராதனம், லட்சுமி நாராயண ஆவாகனம், கலச ஆவாகனம், கேசவாதி ஹோமத்துடன் தொடங்கியது. பின் சுதர்சன ஹோமம், லட்சுமி நரசிம்மர் ஹோமம், லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம், ஸ்ரீ பூரவராக ஹோமம், மற்றும் தன்வந்திரி, மகாலட்சுமி, கருடாழ்வார் ஆஞ்சநேயர் ஹோமம், சகல காரிய சித்தி ஹோமம், புத்திர சந்தான ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்று சிறப்பு அபிஷேகம் நடந்தது. நெய், தேன் பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், வாசனை திரவியங்கள் கொண்டு விசேஷ திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் நடந்தது. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகி மற்றும் அர்ச்சகர் அனந்த ஆழ்வான் மேற்கொண்டார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.