ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18டிச 2024 01:12
ரெகுநாதபுரம், : ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு காப்பு கட்டுதலுடன் கொடியேற்ற விழா துவங்கியது. முன்னதாக காலை கணபதி ஹோமம் அஷ்டாபிேஷகம் சிறப்பு தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து வல்லபை ஐயப்பன் சன்னதி முன்புறம் உள்ள தங்க முலாம் பூசப்பட்ட கொடிமரத்தில் கொடி பட்டத்தை தலைமை குருசாமி மோகன் ஏற்றினார். காலை 7:00 மணிக்கு பூதபலி நடந்தது. டிச.25 மாலை 4:00 மணிக்கு பள்ளிவேட்டை புறப்பாடு (நகர் வலம்) இரவு 10:00 மணிக்கு சயன திருக்காட்சி நடக்க உள்ளது. மறுநாள் டிச.26 காலை கோ பூஜை, வண்ண பொடிகளை பூசியவாறு பேட்டை துள்ளல், பஸ்மக்குளத்தில் ஆராட்டு வைபவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் காலை 10:00 மணிக்கு கொடி இறக்கத்துடன் மகா அபிஷேகம் நடக்கிறது.கோயில் வளாகத்தில் பஜனை, நாமாவளி, கூட்டு வழிபாடு நடந்த பின் பக்தர்களுக்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடர் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.