அலங்காநல்லூர்; அலங்காநல்லூர் தர்ம சாஸ்தா கோயில் 52ம் ஆண்டு உற்ஸவ விழா மூன்று நாட்கள் நடந்தது. முதல் நாள் திருப்பள்ளி எழுச்சி, மங்கல இசை சிறப்பு ஆராதனையை தொடர்ந்து நாதஸ்வர இசை மற்றும் பக்தி பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன.2ம் நாள் நவநீத கண்ணன் மாதர் பஜனை குழுவினர் நடத்திய 1008 திருவிளக்கு பூஜையும், 3ம் நாள் கணபதி ஹோமத்துடன் சிறப்பு யாக பூஜைகள் துவங்கின. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. உச்சிக்கால பூஜை, பஜனை நிகழ்ச்சிகளை தொடர்ந்து மாலை வான வேடிக்கையுடன் ஐயப்பன், முருக பக்தர்களுடனும், பாலாஜி ராமானுஜ சுவாமி குழுவினர் பஜனையுடனும் மின்னொளி சப்பரத்தில் சுவாமி நகர்வலம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சீனிவாசன், பக்தி பணி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.