காரைக்குடி; காரைக்குடியில் எல்லா உயிர்களுக்கும் படி அளக்கும் விழாவையொட்டி, அஷ்டமி சப்பரங்களில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மார்கழி அஷ்டமி தினத்தன்று விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், அம்பாள், சண்டிகேஸ்வரர் தனித்தனி சப்பரத்தில் எழுந்தருளி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். அஷ்டமி திருவிழா இன்று நகரச் சிவன் கோயிலில் நடந்தது. விழாவையொட்டி, கோயிலில் இருந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் உட்பட அனைத்து சுவாமிகளும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் செஞ்சை, கொப்புடைய நாயகி அம்மன் கோயில், மகரநோன்பு பொட்டல் வழியாக நகரச்சிவன் கோயிலை அடைந்தனர். வழிநெடுகிலும் பக்தர்களுக்கு படி அளக்கும் நிகழ்ச்சியும் , சிறப்பு பூஜைகளும் நடந்தது.