கொண்டத்து காளியம்மன் கோவிலில் திருமண மண்டபம் கட்டுமான பணி ஜரூர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23டிச 2024 03:12
அனுப்பர்பாளையம்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ் பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் திருமண மண்டபம் கட்ட இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 5 கோடியே 40 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. திருமண மண்டபம் கட்டுவதிற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மாதம் நடைபெற்றது. திருமண மண்டபம் 26 சென்ட் இடத்தில், கீழ் தளத்தில் உணவு கூடம், முதல் தளத்தில் 300 பேர் அமரக்கூடிய வகையில் திருமணகூடம், லிஃப்ட் மற்றும் வசதியுடன் கட்டப்படுகிறது. திருமணம் மண்டபம் கட்டம் கட்டுவதிற்கான பணி தொடங்கி ஜரூராக நடைப்பெற்று வருகிறது. கட்டுமான பணி 18 மாதத்தில் நிறைவு பெறும். அதனை தொடர்ந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். என அதிகாரிகள் தெரிவித்தனர்.