விவேகானந்தா சேவாலயத்தில் சாரதாதேவி 173வது ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23டிச 2024 04:12
அவிநாசி; ஸ்ரீ விவேகானந்தா சேவாலயத்தில் அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் 173வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. திருமுருகன்பூண்டி நகராட்சியில் சன்னதி வீதி பகுதியில் உள்ள ஸ்ரீ விவேகானந்தா சேவாலயத்தின் ஸ்ரீ சாரதா தேவி நிவாஸ் வளாகத்தில் அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் 173 வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது அதில் அதிகாலை மங்கல ஆரதி,பஜனை, திருப்பாவை பாராயணம், ஸ்ரீ லலிதா சகஸ்ர நாம பாராயணம் ஆகியவை நடைபெற்றது.