தங்கப்படியில் மக்களுக்கு அரிசி வழங்கிய மீனாட்சி சுந்தரேஸ்வரர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23டிச 2024 05:12
தேவகோட்டை; மார்கழி மாதம் மகா அஷ்டமியை முன்னிட்டு இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் அஷ்டமி பிரதட்சணமாக சிறப்பு அலங்காரத்தில், வெள்ளி வாகனங்களில் நகர வீதிகளில் உலா வந்தனர். மகா அஷ்டமி காரணமாக மக்களுக்கு படி அளக்கும் ஐதீகப்படி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கையில் தங்கப்படியுடன் வீதி உலா வந்தார். வழிநேடுகிலும் பக்தர்கள் சுவாமிகளுக்கு பூஜை செய்தனர். காலையில் புறப்பட்ட பஞ்சமூர்த்திகள் மாலையில் திருக்கோவிலை வந்தடைந்தனர். சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் தீபாராதனை நடந்தது . இதனைத் தொடர்ந்து சுமார் இரண்டாயிரம் பக்தர்களுக்கு கோவிலுனுள் தங்கப்படியில் அரிசி வழங்கப்பட்டது. அரிசியை பெற்று மக்கள் சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.