கோவை ஐயப்பன் பூஜா சங்கத்தில் 74 வது பூஜா மஹோத்ஸவம் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25டிச 2024 01:12
கோவை : கோவை ராம்நகர் சத்தியமூர்த்தி சாலையிலுள்ள, ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தின் 74வது மஹோற்சவ விழா துவங்கியது.
விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 4:30 மணிக்கு மஹாகணபதி ஆவாஹனம் செய்து கணபதி ஹோமம் நடந்தது.தொடர்ந்து தர்மசாஸ்தா, ஸ்ரீஅம்பாள் ஆவாஹனம் செய்து சூர்யநமஸ்காரம் அபிஷேகம் நடந்தது. காலை 7:30 மணிக்கு மகாருத்ர ஜபம் நவக்கிரஹஹோமம், ஸ்ரீசுதர்சனஹோமம் ஆகியவை நடந்தது. 12:30 மணிக்கு மகாபூர்ணாஹூதி, வசோர்தாரை மகாதீபாராதனை நடந்தது. வழக்கமாக நடைபெறும் பக்தபோஜனம் என்றழைக்கப்படும் மகாஅன்னதானம் வழங்கப்பட்டது. துவக்க நாளான இன்று ஐயப்பன் லட்சார்சனையில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி ஐயப்பனை வழிபட்டனர்.