பரமக்குடியில் இன்று ஐயப்பன் திருக்கல்யாணம்; டிச.30ல் அனுமன் ஜெயந்தி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25டிச 2024 11:12
பரமக்குடி; பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் இன்று திருக்கல்யாணம் நடக்கிறது. பரமக்குடி ஐயப்ப சுவாமி வடக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இங்கு புஷ்களா தேவி தனி சன்னதியில் உள்ளார். நேற்று இரவு 7:00 மணி தொடங்கி சுவாமிகளுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இன்று காலை 9:30 மணி தொடங்கி மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலத்துடன் திருக்கல்யாணம் நடக்க உள்ளது.
*பரமக்குடி சிவன் கோயில்களில் நேற்று முன்தினம் மாலை கால பைரவர் அஷ்டமி விழாவையொட்டி, பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
*டிச. 30 அன்று காலை அனைத்து அனுமன் கோயில்களிலும் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது.