மார்கழி அனுஷம்; காஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27டிச 2024 10:12
கோவை; ஜகத்குரு ட்ரஸ்ட் சார்பில் மார்கழி மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு மகா பெரியவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் மகா பெரியவரின் விக்கிரகத்திற்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
*மார்கழி மாதம் அனுஷ நட்சத்திரத்தை முன்னிட்டு மகா பெரியவா ஆராதனை மகோத்சவம் கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் மகாசங்கர மினி ஹாலில் நடந்தது. முதல் நிகழ்வாக காலை 5 மணிக்கு கோ பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து ஆவஹந்தி ஹோமம் நடந்தது.காலை 8 மணி அளவில் மகா பெரியவர் விக்கிரகத்திற்கு அபிஷேகம் பூஜை நடைபெற்றது.இதில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் காட்சியளித்த மகா பெரியவர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.