விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28டிச 2024 05:12
விருத்தாசலம்; விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில், நுாற்றுகால் மண்டபத்தில் உள்ள நந்தி பகவானுக்கு இன்று சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி, இன்று காலை 10:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், 11:00 மணிக்கு நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், எலுமிச்சை, தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பகல் 2:30 மணியளவில் சந்தன காப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் அருள்பாலித்தார். மாலை 4:00 மணியளவில் அருகம்புல் மாலை சாற்றி, தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். அதேபோல், மங்கலம்பேட்டை மாத்ருபுரீஸ்வரர், சின்னவடவாடி அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.