Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கோவில்களில் தேய்பிறை அஷ்டமி ... திருப்புத்தூரில் யோக பைரவாஷ்டமி; சந்தனக்காப்பு அலங்காரத்தில் யோகபைரவர் திருப்புத்தூரில் யோக பைரவாஷ்டமி; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்; இரவு, பகலாக நடக்கிறது
எழுத்தின் அளவு:
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்; இரவு, பகலாக நடக்கிறது

பதிவு செய்த நாள்

21 ஜன
2025
05:01

தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.


கோவையின் அடையாளங்களில் ஒன்றாகவும், ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவிலாகவும் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், வரும், பிப்., 10ம் தேதி, கும்பாபிஷேக விழா பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது. இதற்காக, கடந்த, 2023ம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, கோவில் கோபுரங்கள், உள் பிரகாரம், வெளிப்பிரகாரங்களில் வர்ணம் பூசும் பணிகள் துவங்கப்பட்டது. தற்போது, வர்ணம் பூசும் பணிகள், நிறைவடைய உள்ளது. கோவில், முன்பு, கும்பாபிஷேகத்திற்காக, 60 குண்டங்கள், 49 வேதிகையுடன் கூடிய யாகசாலை மண்டபங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கோவில் உள்ள கல் தளங்கள் வழுவழுப்பாகி உள்ளதால், அதனை கொத்தும் பணியும் நடந்து வருகிறது. அதேபோல, தெப்பக்குளத்தில் புதர்களை அகற்றி, புனரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கும்பாபிஷேக விழா, நெருங்கியுள்ளதால், கும்பாபிஷேக பணிகள் அனைத்தும் தீவிரமாக நடந்து வருகிறது. குறைந்த நாட்களே உள்ளதால், பணிகளை விரைந்து முடிக்க, இரவு, பகலாக பணிகள் மேற்கொள்ளப்படும். யாகசாலை மண்டபம் பணிகள், ஜன., 30ம் தேதி, நிறைவடையும் என, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar