கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு; பைரவருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜன 2025 05:01
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோவில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. தாடிக்கொம்பு சவுந்திரராஜப்பெருமாள் கோயிலில் சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு இளநீர், தேன், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனப் பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. கோயமுத்துார், வெள்ளக்கோவில், திருப்பூர், ஈரோடு ,கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதேபோல் திண்டுக்கல் பத்மகிரீஸ்வரர் அபிராமியம்மன் கோயில், கூட்டுறவுநகர் செல்வவிநாயகர் கோயில், ஜான்பிள்ளை சந்து வாராகி அம்மன் கோயிலில் பைரவர் சன்னதியில் சிறப்பு பூஜை. அபிஷேகம் நடந்தது. தேங்காய் வெள்ளைப் பூசணியில் விளக்கு ஏற்றியும் பக்தர்கள் வழிப்பட்டனர்.