பதிவு செய்த நாள்
03
டிச
2012
11:12
புதுச்சேரி: முருங்கப்பாக்கத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவில் திருப்பணி செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. புதுச்சேரி முருங்கப்பாக்கத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவில் 200 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையும் சிறப்பும் வாய்ந்தது. இக்கோவிலுக்கு கடந்த 2000ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோவிலின் துணை கோவில்களான நடுத்தெரு மாரியம்மன் கோவில், பள்ளத்தெரு சந்துவெளி மாரியம்மன்கோவில் மற்றும் துலுக்கானத்தம்மன் கோவிலுக்கு திருப்பணி செய்ய வேண்டியுள்ளது. இந்த நான்கு கோவில்களுக்கும் திருப்பணி செய்வது மற்றும் திருப்பணிக்குழு அமைப்பது தொடர்பான திருப்பணி ஆலோசனைக்கூட்டம் திரவுபதியம்மன் கோவில் "வசந்த மண்டபத்தில் சபாநாயகர் சபாபதி தலைமையில் நேற்று காலை 10 மணிக்கு நடந்தது. கோவில் அறக்காவலர் குழு தலைவர் ஞானப்பிரகாசம், துணைத்தலைவர் ஆறுமுகம், செயலாளர் கிருஷ்ணராஜ், பொருளாளர் பழனிவேலு, உறுப்பினர் கிருஷ்ணன், முன்னாள் அறங்காவலர்கள் ராமக்கிருஷ்ணன், பன்னீர்செல்வம், தியாகராஜன், பாலசுப்ரமணியன், ராமச்சந்திரன், பால கிருஷ்ணன், நாராயணசாமி, அரசியல் பிரமுகர்கள் திருநாவுக்கரசு, கணேசன், பாஸ்கரன், பத்மநாபன், கணபதி உட்பட பலர் கலந்து கொண்டனர். திரவுபதியம்மன் கோவில், நடுத்தெரு மாரியம்மன் கோவில், பள்ளத்தெரு சந்துவெளி மாரியம்மன் கோவில் மற்றும் துலுக்கானத்தம்மன் கோவில் ஆகிய நான்கு கோவில்களுக்கும் 1.5 கோடி ரூபாய் செலவில் திருப்பணி மேற்கொள்வது. இத்திருப்பணியை சிறப்பாக செய்ய திருப் பணிக் குழு அமைப்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.