பதிவு செய்த நாள்
28
ஜன
2025
11:01
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி அடுத்துள்ள நாகலாபுரம் மண்டலம் சுருட்டுப் பள்ளியில் வீற்றிருக்கும் ஸ்ரீ சர்வ மங்களா சமேத பள்ளிகொண்டேஸ்வர சுவாமி கோவிலில் சோமவாரப் பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள்நடைபெற்றன. நேற்று (27.1.2025) திங்கட்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு, கோயிலில் நந்தீஸ்வர சுவாமிக்கும், ஸ்ரீ வால்மீகேஸ்வர சுவாமிக்கும் ஒரே நேரத்தில் மஞ்சள், குங்குமம், பால், பன்னீர், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பிறகு, சுவாமி அம்மையார் மற்றும் பிரதோஷ நந்தீஸ்வர சுவாமிக்கு பல்வேறு மலர்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு, தூப, தீபம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோயிலுக்குள் சாமி அம்மையார் ஊர்வலம் நடைபெற்றது. இந்த பிரதோஷ அபிஷேக ஆராதனையில் கோயில் நிர்வாக அலுவலர் பி. லதா, கோயில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.