தை அமாவாசை; ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜன 2025 10:01
ராமேஸ்வரம்; தை அமாவாசை தினத்தையொட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் தர்ப்பணம் செய்து, திதி கொடுக்க குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் வெளி மாவட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி ராமநாதசுவாமி திருக்கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை தினங்களில் பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து திதி கொடுத்தனர். இந்த நிலையில் இன்று தை அமாவாசை தினத்தையொட்டி வெளி மாவட்டம், மாநிலத்தில் இருந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, திதி கொடுத்து வழிபட்டனர். பின் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு உள்ளே உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் பகுதி முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல திருப்புல்லாணி அருகே உள்ள சேதுக்கரை, தேவிபட்டினம், உள்ளிட்ட பகுதிகளில் புனித நீராடி தங்களை முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.