ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே சுப்புத்தேவன் வலசை சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேக சிறப்பு பூஜைகள், டிச.,2ல் துவங்கின. நேற்று காலை 9 மணிக்கு கடம்புறப்பாடு நடந்தது. காலை 10.25க்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.