ஊத்துக்கோட்டை: மூன்று கோவில்களில் நடந்த கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிப்பட்டனர். பென்னலூர்பேட்டை அடுத்த, அம்மம்பாக்கம் கிராமத்தில் போத்துராஜா மற்றும் ஏரிக்கரை ஓரத்தில் செல்லியம்மன் ஆகிய இரு கோவில்கள் உள்ளன. இக்கோவில்களை சீரமைத்து, மகா கும்பாபிஷேக விழா, கடந்த சனிக்கிழமை கணபதி ஹோமத்துடன் துவங்கியது.நேற்று காலை, 9:30 மணிக்கு போத்துராஜா கோவில் மேல் அமைக்கப்பட்ட விமானத்தின் மீது, கலச நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.அதேபோல், காலை 10:00 மணிக்கு செல்லியம்மன் கோவில் மேல் அமைக்கப்பட்ட, புதிய விமானத்தின் மீது கலச நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஆர்.கே.,பேட்டை ஆர்.கே.,பேட்டை அடுத்த, அஸ்வரேவந்தாபுரம் காலனியில் உள்ள ராமர் கோவிலில், நேற்று கும்பாபிஷேகம் விழா நடந்தது. காலை 10:30 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க குருக்கள் கோபுர விமானத்தின் மீது, புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.