பதிவு செய்த நாள்
11
அக்
2026
12:10
திருப்பூர்: திருப்பூர் கே.செட்டிபாளையம் அகத்தியர் கோவிலில், அகத்தியர் எண்ணாங்கு அறங்கள் தர்ம பரிபாலன அறக்கட்டளை சார்பில் லட்சுமி குபேர வசிய யாகமும், அன்னதானமும் நடந்தது.
அதிகாலை 4:30 மணிக்கு சர்வசித்தி விநாயகர், அகத்தியர், பதஞ்சலி மகரிஷி, தன்வந்திரி பகவான், ஸ்ரீவித்யா பராபட்டாரிகா மகாசோடஷிக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. தொடர்ந்து மகா மிருத்யுஞ்ஜய யாகம், லட்சுமி குபேர வசிய யாகம், புருஷ சூக்த ஹோமம், அதிசூட்சும பித்ரு கண மகா யாகம் நடந்தன. உலக நன்மைக்காகவும், திருப்பூர் தொழில் வளம் சிறக்கவும் வழிபாடு நடந்தது.
பின்னர், ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் முன் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு கேசரி, புளி, தக்காளி, தயிர் சாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருப்பூர், ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் முன், அகத்தியர் எண்ணாங்கு அறங்கள் தர்ம பரிபாலன அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.