Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரங்க பஞ்சமி; உஜ்ஜைன் மகாகாலேஷ்வர் ... குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் நடைபெற்று வந்த மாசி உற்சவம் நிறைவு குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலை கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்
எழுத்தின் அளவு:
மருதமலை கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்

பதிவு செய்த நாள்

19 மார்
2025
03:03

வடவள்ளி; மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.


முருகனின் ஏழாம் படைவீடாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில், கடந்த 2013ம் ஆண்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. கும்பாபிஷேகம் செய்யப்பட்டு 12 ஆண்டுகள் நிறைவடைந்ததால், வரும் ஏப்ரல் 4ம் தேதி, கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக கடந்த ஜனவரி 20ம் தேதி, பாலாலயம் செய்யப்பட்டு, கும்பாபிஷேக பணிகள் துவங்கப்பட்டது. ராஜகோபுரம், மூலஸ்தானம், ஆதி மூலஸ்தானம், மற்ற சன்னதிகள், படிக்கட்டு பாதையில் உள்ள சன்னதிகள் ஆகியவற்றில், வர்ணம் பூசும் பணிகள் நடந்து வருகிறது. ராஜகோபுரம் மற்றும் மற்ற சன்னதியில் இருந்த, 16 பழைய கலசங்கள் அகற்றப்பட்டுள்ளது. புதிய கலசங்கள் வந்தவுடன், அதை பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. கோவில் வளாகத்தில், 70 அடி நீளம், 70 அகலத்திலும்; 40 அடி நீளம், 60 அடி அகலத்திலும்; 40 அடி நீளம், 40 அகலத்திலும், யாகசாலை மண்டபம் அமைக்க அமைக்கப்பட்டு வருகிறது. இந்த யாகசாலை மண்டபத்தில், 73 குண்டமும், 12 வேதியையும் அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல, சன்னதிகளின் மேல்தளத்தில், மழைநீர் உள் புகாதவாறு, சூரிய ஒளி பிரதிபலிப்பு ஓடுகள் பதிக்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. யாகசாலை மண்டப பணிகள், வரும், 25ம் தேதிக்குள் நிறைவடையும், வசந்த மண்டப பணிகளும், 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. கும்பாபிஷேக பணிகள் இன்னும் ஒரு வாரத்தில், முழுவதுமாக செய்து முடிக்கப்படும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar