குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் நடைபெற்று வந்த மாசி உற்சவம் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2025 04:03
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற்று வந்த மாசி உற்சவம் நிறைவடைந்தது.
கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம் கடந்த மார்ச் 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக தேவஸ்தானத்துக்கு சொந்தமான, 38 யானைகளில், தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று யானைகள் பங்கேற்ற யானையோட்டம் நிகழ்ச்சி நடந்தது. இதில் பாலு என்ற யானை வெற்றி பெற்றது. பத்து நாட்களில் நடந்த உற்சவத்தில், இந்த யானை மீது உற்சவர் அமர்ந்து எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். நாள்தோறும் மூலவருக்கு விசேஷ அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது. விழா நாட்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றபடி உற்சவமூர்த்தியையும், மூலவரையும் வழிபட்டனர். விழாவையொட்டி 10 நாட்களும் பக்தர்களுக்கு கோவில் தேவஸ்தானம் சார்பில் அன்னதானம், அன்னலட்சுமி மண்டபத்திலும், பந்தல்களிலும் வழங்கி வந்தனர். இந்த நிலையில் உற்சவத்தின் நிறைவு நாளான இன்று பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை ஐந்து யானைகளின் அணிவகுப்பில் செண்டை மேளம் முழங்க உற்சவமூர்த்தி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பிற்பகல் சிறப்பு அலங்காரத்தில் உற்சவமூர்த்தி எழுந்தருளி வீதி உலா வந்தனர். கோவில் வளாக சிறப்பு மண்டபத்தில் அமர வைத்துள்ள உற்சவமூர்த்திக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உற்சவர் நீராடும் "ஆறாட்டு நிகழ்ச்சிக்காக நந்தன் என்ற யானை மீது உற்றவர் எழுந்தருளினர். தொடர்ந்து நடந்த ஆறாட்டு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.