கும்பகோணம் சாரங்கபாணி கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மே 2025 11:05
தஞ்சாவூர், - 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்து 3வது முக்கிய திவ்ய தேசமாக போற்றப்படும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோவிலில் தான் தமிழ் வேதமான நாலாயிர திவ்ய பிரபந்தம் அரங்கேற்றம் செய்யப்பட்ட புனித தலமாகும். இக்கோவிலில் சித்திரைப் பெருந்திருவிழாவின் தொடக்கமாக கடந்த 02ம் தேதி கொடியேற்றம் நடைபெற்று தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 09ம் நாளான இன்று காலை உற்சவர் சாரங்கபாணி சுவாமி ஸ்ரீதேவி பூமிதேவி தாயார்களுடன் திருத்தேருக்கு எழுந்தவுடன் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தும் தேரில் பவனி வரும் சுவாமிகளை தரிசனம் செய்தும் வருகின்றனர்